கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடுகள், செம்மரி ஆடுகளை தாக்கும் நச்சுயிரி நோய் பரவலாக பரவி வருகிறது. இந்த நோய் ஆடுகளை தாக்கி பாதிப்படைய செய்யும் வைரஸ் கிருமி ஆகும். இந்த நோய் தாக்கினால் ஆடுகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல், கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஆகவே முன்கூட்டியே காப்பதே சிறந்தது என்ற கோட்பாட்டின்படி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் களியக்காவிளையில் இன்று (28-ம் தேதி) நடைபெற்றது. இந்த முகாமில் கன்னியாகுமரி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, தக்கலை கோட்ட உதவி இயக்குனர் எட்வர்ட் தாமஸ் மற்றும் 29 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய விலங்கின நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொள்ளை நோய் தடுப்பூசி பணிகள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாய பெருங்குடி மக்கள் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.