கருங்கல்: பெண் டாக்டர் திடீர் மாயம்

0
75

கருங்கல் அருகே ஆலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ செல்வம் மகள் கரோனா (24) ஹோமியோபதி டாக்டர் படித்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கரோனா பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து அவரது தாயார் சரசம் இன்று (27-ம் தேதி) கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான கரோனாவைத் தேடி வருகின்றனர். அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆண் நண்பருடன் சாட்டிங் செய்வாராம். இதனைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். எனவே அவர் தானாகவே வீட்டைவிட்டுச் சென்றாரா? அல்லது யாராவது கடத்திச் சென்றிருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here