குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 13-ம் தேதி இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி குதித்து, பிரதான கோவிலை உடைத்து கோயில் கருவறைக்குள் இருந்த மிகப் பழமையான 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், வெள்ளி அங்கிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது போன்று அதே நாளில் புதுக்கடை அருகே மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள 8 கிலோ எடையுள்ள உத்சவ மூர்த்தி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 22ம் தேதி இரவு திருடப்பட்ட 2 சிலைகளையும் மீட்டு, மரிய சிலுவை என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மாயமான முஞ்சிறை பகுதி தோட்டவாரம் என்ற இடத்தை சேர்ந்த ரெவி என்பவர் மகன் ரெஜு (34) என்பவரை புதுக்கடை அருகே காப்புக் காடு பகுதியில் வைத்து போலீசார் நேற்று (நவம்பர் 28) இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தொடர்புடைய மதுரை பிரேம் குறித்து விசாரித்து வருகின்றனர்.