நாகர்கோவிலில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று (ஏப்ரல் 16) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில வாணிப கழக நாம் தமிழர் தொழிற்சங்கம் மாநிலத் தலைவர் மோஸ்லின் பியர்சன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம்...
குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு
குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த ஹெலன் என்பவர் இறங்கும் போது கையில் வைத்திருந்த 2.67 லட்சம் ரூபாய் பணத்தை...
மார்த்தாண்டம்: கிறிஸ்தவ கல்லூரியில் வணிகவியல் விழா
மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை மன்றவிழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா கிறிஸ்டி தலைமை தாங்கினார். முதுகலை வணிகவியல் துறை தலைவர் கிரிஸ்டல் பாப்பா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி...
குமரி: பேரூராட்சி பதிவறை எழுத்தர், மின் பணியாளர் கைது
குமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் கமலன் என்பவர் மகன் தேவதாஸ் என்பவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது சகோதரரின் 18 செண்ட் இடம் மற்றும் அதில் உள்ள வீட்டை பராமரித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது உரிமையாளர்...
கடையாலுமூடு: பாதை பிரச்சனை; பொதுமக்கள் சாலை மறியல்
கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மருதம்பாறை பகுதியில் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் பள்ளி மற்றும் பொது கிணறும் உள்ளன. தற்போது அந்தப் பகுதியில் வெளிநபர்கள் பட்டா பெற்று குடியிருந்து வருகின்றனர்.
புதிய வீடுகள் வந்தபோது பொது கிணற்றுக்கும், உட்பகுதியில் உள்ள 13 குடியிருப்புகளுக்கும் செல்ல மக்கள் முன்பு...
பளுகல்: வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
பளுகல் அருகே குட்டைக்கோடு பகுதி சேர்ந்தவர் சாந்தி (60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜேனட் தங்கம். குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தலா 5.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கடந்த 1965 ஆம் ஆண்டு அதே பகுதி...
கொல்லங்கோடு: வாகனம் மோதிய மூதாட்டி உயிரிழப்பு
நித்திரவிளையருகே கொல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ரோசம்மாள் (75). கடந்த மாதம் 29ஆம் தேதி மதியம் அந்தப் பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது...
கிள்ளியூர்: கடலோர தடுப்பு சுவர் அமைக்க எம்எல்ஏ கோரிக்கை
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: - கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனயம் புத்தன்துறை ஊராட்சி பகுதியான இனயம் சின்னத்துறை மற்றும் ராமன்துறை மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் கடலில் போடப்பட்ட பெரிய பாறைக் கற்கள் கடலுக்குள்...
நாகர்கோவிலில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய...
இரணியல்: ரூ. 12 லட்சம் பறித்த வாலிபர் கைது
கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 11ஆம் தேதி இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 196 கிராம் தங்க நகைகள் ஒரு நகைக்கடையில் அடமானத்தில் உள்ளதாகவும், அதை திருப்பி விற்பனை செய்ய ரூ....













