தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை கைவிட வேண்டும், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மர்சலின் ரஜீலா, நிர்வாகிகள் அருணாசலம், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.