முட்டம்: படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்
குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று (ஜூலை 29) முட்டம் கடற்கரை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு பிரின்ஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார்....
மணவாளகுறிச்சி: விஷ மாத்திரை தின்று மூதாட்டி தற்கொலை
மணவாளக்குறிச்சி அடுத்த கல்படி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு மனைவி டெய்சி ராணி (65). இவர் அதே பகுதியில் உள்ள மகன் கிங்ஸ் ராஜா என்பவர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக டெய்சிராணி வீட்டில் சரியாக உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதனால் மகன் கண்டித்துள்ளார்.
இதனால்...
மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 3 பேர் மீது வழக்கு
கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகள் ஆஷ்னா (22). இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜான்தேவ் ஆனந்த் (33) என்பவருக்கும் கடந்த 2020 அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 70 பவுன் நகைகள், 10 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் செய்துள்ளனர்.
மீண்டும் வரதட்சணை கேட்டு...
முஞ்சிறை: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
நடைக்காவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜான் என்பவர் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: - தலைவராக இருந்த நேரம் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, 5 லட்சத்தில் கட்டிடம் கட்டினோம். தற்போழுது இந்த...
நித்திரவிளை: குருசடி விரிவாக்கம் செய்ய திடீர் எதிர்ப்பு
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி குருசடி உள்ளது. இந்த குருசடியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. அதே பகுதி ரசல்ராஜ் என்பவர் குருசடி விரிவாக்கம் செய்தால் தனது வீடு மறைத்துவிடும் என்று கூறி நேற்று மாலை பணியை தடுத்து நிறுத்தினார்.
இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் அந்த பகுதியில்...
வள்ளியாமடத்து இசக்கி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அன்னப்படைப்பு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இங்கு திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை...
நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட குரூஸ் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 8வது வார்டுக்குட்பட்ட வாத்தியார்விளை கைலாஷ் கார்டன் 1வது குறுக்குத் தெருவில் ரூ.5 லட்சம் செலவில் அலங்கார தரைக்கற்கள்...
நாகர்கோவில்: நஷ்டஈடு வழங்கக் கோரி மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியக் கால்வாய்களில் ஒன்றான அனந்தனார் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் வழங்கியதால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தவறான அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட பாசன நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் அதிகாரியைச்...
கொல்லங்கோடு: டெம்போவில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ (23). இவர் தனது பைக்கில் இன்று ஊரம்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்குழிச் சர்ச் பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போ மீது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜிஜோ நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார்...
குளச்சல்: தவெகவினர் 200 பேர் மீது வழக்கு
குமரி கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுவதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் காமராசர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும், அரசுக்கு எதிராக கோஷங்கள்...





