கொல்லங்கோடு: அடகு நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு
கொல்லங்கோடு அருகே பனவிளையைச் சேர்ந்த ஒருவர், கடந்த மே மாதம் ₹2.83 லட்சத்திற்கு 52 கிராம் நகைகளை அடமானம் வைத்தார். அசல் மற்றும் வட்டியுடன் நகைகளை மீட்கச் சென்றபோது, நகைக்கடை உரிமையாளர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்ட...
குமரி: முத்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் காணியாளன் புதுத்தெரு அருள்மிகு ஸ்ரீ ஞான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடி பெருக்கையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு முத்தீஸ்வரர் சமேத...
வில்லுக்குறி: குளத்தில் பேருராட்சி ஊழியர் கணவர் சடலம்
வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். குழந்தைகள் இல்லை. ஜீவா பயிற்சிக்கு கடந்த 1 தேதி ஈரோடு சென்றுள்ளார். 2-ம் தேதி ஜோசப் ஜெயசிங் வீட்டிலிருந்து மாயமானார்.
ஜீவா பயிற்சியில் இருந்து அனுமதி விடுப்பு பெற்று வீட்டிற்கு வந்து...
இரணியல்: பைக் மோதி இளம்பெண் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி ராதிகா (39). 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். நேற்று குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பி விட்டு, ராதிகா சாலையின் இடது ஓரமாக நடந்து சென்றார். அப்போது வேகத்தில்...
குமரியில் பாஜக போராட்டம்: எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தடைப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில் எம்.ஆர். காந்தி எம்எல்ஏ தலைமையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டத்தில்...
காஞ்சாம்புறம்: உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் நல உதவிகள்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இயன்றவரை இயலாதர்க்கு உதவும் விதமாக எல்லா மாதமும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 72 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின்...
நித்திரவிளை: தாயை தாக்கிய மகன் கைது
நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி கமலம். இவர்களது 3வது மகன் வினு. இவர் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கிராத்தூருக்கு வந்த வினு தனது மூத்த சகோதரர் வீட்டில் சென்று தகராறு செய்தார்.
இதைக் கண்ட தாயும் தந்தையும் அங்கு வந்து வினுவைத்...
நாகர்கோவில்: வீட்டுமனை பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூரில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், கடை மடைக்கு தண்ணீர்விட வேண்டும் சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி...
குலசேகரம்: கல்லூரி விளையாட்டு விழா; தொடங்கி வைத்த எஸ்.பி
குலசேகரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி நேற்று (ஜூலை 31)தொடங்கியது. வரும் 5-ம் தேதி வரை மாணவ மாணவிகளின் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் சொப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...
மார்த்தாண்டம்: மாதர் சங்க மாநாடு; அலுவலகம் திறப்பு
மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17வது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அலுவலக திறப்பு விழா நேற்று (ஜூலை 31) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வரவேற்பு குழு தலைவர் லேகா தலைமை வகித்தார்....










