மார்த்தாண்டம்: தங்கம் மாற்றித் தருவதாக.. 7 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில், லிட்டில் மேரி (55) என்பவர் 7 பவுன் தங்க நகைகளை மாற்றி எடுக்கச் சென்றபோது, 60 வயது முதியவர், 45 வயது பெண் மற்றும் 10 வயது குழந்தை ஆகியோர் சேர்ந்து, லாபத்தில் நகைகளை மாற்றித் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து நகைகளைப் பெற்றுக்கொண்டு போலியான நகைகளைக்...
நித்திரவிளை: திருமணமாகி ஒரேநாளில் புதுப்பெண்ணுக்கு சித்ரவதை
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி (25) என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாளிலிருந்தே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அஸ்வினியை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி...
மார்த்தாண்டம்: பயன்பாடற்ற பயோ கழிவறை.. விஜய் வசந்த் எம்பி ஆய்வு
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பயோ கழிவறை பயன்பாடின்றி காணப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய விஜய் வசந்த் எம்பி சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். அவருடன் குழித்துறை நகராட்சி ஆணையாளர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டு, கழிவறையை பயன்பாட்டிற்கு...
நர்ஸ் மாயம்: புதுக்கடை போலீஸ் விசாரணை
புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்ற நர்ஸ், வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது தாய் மீனா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, மாயமான நர்சை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிரியா அப்பகுதியில் உள்ள...
பைங்குளம் நூலக வாசகர் வட்ட கூட்டம்
புதுக்கடை அருகே பைங்குளம் அரசு முழு நேர நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூலகர் துளசி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சஜீவ், சனல் கருத்துரையாற்றினர். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியேற்றுவது மற்றும் நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது என...
நாகர்கோவில்: மேயரிடம் வாழ்த்து பெற்ற மல்யுத்த வீரர்
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தான் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷிடம் நேற்று...
கிள்ளியூரில் திமுக சார்பில் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் இன்று காலை கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....
தக்கலை: கள்ள நோட்டு வழக்கு – 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
தக்கலை அருகே மணலியில் 2003-ல் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட கிளைமன்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது தலைமறைவான சசி...
குலசேகரம்: ரப்பர் குடோனில் தீ – 4 டன் ரப்பர் சேதம்
குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஜார்ஜுக்குச் சொந்தமான ரப்பர் உலர் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தாலும், சுமார் 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை....
பாறசாலை அருகே சோகம் – மாடியில் இருந்து விழுந்து பிளம்பர் பலி
பளுகல் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த பிளம்பர் லிபின் ராஜ் (27), பாறசாலை கொற்றாமம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது...












