Google search engine

குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்

கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை கிராம நிர்வாக அலுவலர் அனிஸின் புகாரின் பேரில், சுரேஷின் உடல் குமரி அரசு...

தக்கலை: பஸ்நிலைய விதியை மதிக்காத கேரளா அரசு பஸ்கள் – வீடியோ

தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் கேரளப் பேருந்துகள் நுழையாமல், முக்கிய சாலையில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, கேரளப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்குளம்: பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல் – வழக்கு பதிவு

புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கீழ்குளம் பகுதியில் அனுமதி இன்றி பாறைகளை உடைத்தவர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரைக் கண்டதும் பாறை உடைத்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் 2...

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளிலும், 18 ஆம் தேதி குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் அவர் அளித்த...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி, கேப்ரோடு போன்ற பகுதிகளில் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...

முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்

முட்டம்: பவுலின் மேரி (48), அவரது தாயார் தெரசம்மாள் (90) ஆகியோர் கடந்த 5. 6. 2022 அன்று இரவில் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த வெள்ளிச்சந்தை போலீசார், கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி...

குமரியில்: லாரி விபத்தில் மாணவி மரணம்: டிரைவருக்கு சிறை

தக்கலையில் டாரஸ் லாரி மோதி மாணவி அபினா உயிரிழந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கனிமவள லாரி மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது...

கன்னியாகுமரி: கனிம ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை: ஆட்சியர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கனிமம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை...

குமரி: டெம்போ – பைக் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த ராஜசிங் என்பவரின் மகன் ஜெனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் ஷாபின் (21) ஆகியோர் பைக்கில் முளகுமூடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், எதிரே வந்த டெம்போ ஒன்று அவர்கள் மீது மோதியது....