கருங்கலில் பேருந்து நிலைய கட்டட பணிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் புதிதாக ரூ. 5. 22 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையமாக அமைய உள்ள கருங்கல் பேருந்து நிலையத்தை நேற்று பால்வளத்துறை அமைச்சர் T. மனோ தங்கராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சென்று பேருந்து நிலையம் நவீன...
மார்த்தாண்டம் புதிய சந்தை பகுதியில் எம்எல்ஏ ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்படும் சந்தை சரியான முறையில், சரியான தரத்தில் கட்டப்படுகிறதா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் பூரம் திருவிழா
களியக்காவிளை அருகே பாறசாலை ஸ்ரீ மகாதேவர் கோயில் சித்திரை திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (மே.11) மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் 7 யானைகள் பங்கேற்ற பூரம் விழா நடந்தது. இரவு 10 மணிக்கு பாறசாலை சந்திப்பில் குடைமாற்றல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான...
இனயம்: மீனவர் ஓய்வறை திறந்த எம்.எல்.ஏ
இனையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் மீனவர் கிராமத்தில் அன்பியம் 29- பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கி மீனவர் ஓய்வறை அமைக்கப்பட்டது.
இதை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேற்று திறந்து வைத்தார். இனயம் ஊராட்சி பணியாளர் பிபியான்ஸ் அர்ச்சித்தார். உடன்...
குமரியில் குற்றச்சம்பவங்கள் 60% குறைந்ததாக தகவல்
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 22 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்த ஆண்டு 60% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் 9 கொலை...
குமரி: மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் நேற்று (மே.8) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் துணை இயக்குநர் குடும்ப நலத்துறை மரு. ரவிக்குமார், தனித்துணை...
இரணியல்: பைக் மோதி அங்கன்வாடி ஆசிரியை படுகாயம்
இரணியல் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதாகுமாரி (46). அங்கன்வாடி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று (மே.8) மதியம் ஸ்கூட்டரில் காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக சுஜிதாகுமாரியின் ஸ்கூட்டரை மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி...
குழித்துறை: சடலத்தை பிணவறையில் எடுக்க லஞ்சம்..சிக்கிய ஊழியர்
அருமனை பகுதியை சேர்ந்தவர் செல்வின் இன்பராஜ் (72). ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி. இவரது மனைவி பிரேமாவதி (63). நேற்று காலை கணவன் மனைவியுமாக பைக்கில் ரப்பர் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது தனியார் கல்லூரி பஸ் ஒன்று மோதியதில் பஸ்ஸின் டயரில் சிக்கி பிரேமாவதி சம்பவ...
மார்த்தாண்டம்: நில அளவீடு பணியை தடுத்த எம்எல்ஏ
மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அடிக்கடி ரயில் செல்வதால் இந்த கேட் மூடப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதற்காக...
பளுகல்: தோட்டத்தை சூறையாடிய கும்பல் மீது வழக்கு
பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (62) விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா, காய்கறித் தோட்டம் அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜான் (63) அவரது மகன் ஜான் ஹெலின் மற்றும் கண்டால் தெரியும் ஆறு பேர் கொண்ட...













