Google search engine
தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது. ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன்...
கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமான நிலையத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 76 பயணிகள் மற்றும் நான்கு விமான பணியாளர்களுடன் மினியாபோலிஸிலிருந்து வந்த விமானம்...
அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாலமாக செயல்பட கோஸ்டா ரிகா நாடு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவின் அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோபிள்ஸின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கு ஒரு ‘பாலமாக’ செயல்பட கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, 200 புலம்பெயர்ந்தோர்...
உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதை அடுத்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்களின் சந்திப்பு நாளை (பிப்.18) சவூதி அரேபிய தலைநகரில் நடைபெற உள்ளது. ரஷ்ய வெளியுறவு...
கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கை கடந்த மாதம் தேர்வு செய்தார். நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் இதன் நோக்கம். அதன்படி...
சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு (ஐஎச்ஓ) கடல்கள் மற்றும் பெருங்கடல்களுக்கு பெயர் சூட்டுகிறது. ஏதாவது ஒரு கடல் பகுதியின் பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்து அவசியம். அதன் அடிப்படையில் மட்டுமே ஐஎச்ஓ அமைப்பு கடல் பகுதிகளின் பெயர்களை மாற்றும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக அமெரிக்க வளைகுடா என்று பெயரிட்டுள்ளார். இதை மெக்ஸிகோ அரசு ஏற்கவில்லை. இந்த சூழலில் சர்வதேச அளவில் 'மெக்ஸிகோ வளைகுடா' என்றும் அமெரிக்காவில் மட்டும் 'அமெரிக்க...
தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு, தங்கள் பணியிடத்துக்கு ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனம் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த...
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ம் ஆண்டில் அணு மின் நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 1986-ம் ஆண்டில் அந்த அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கதிர்வீச்சால் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார்...
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது, அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்றிரவு வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும்...
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் பூமிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 8 நாள் பயணமாக விண்வெளி சென்ற அவர், அங்கு 8 மாதங்களாக சிக்கியுள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பூமி திரும்புவதை நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில்...