Google search engine
சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம் அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது...
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். புதிய சர்ச்சைக்கு இது வழிவகுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், அவரை அவரது அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது போன்றும், அவர்களிடம்...
200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச்...
ஐரோப்​பிய நாடு​களு​ட​னான வர்த்​தகப் போரைத் தீவிரப்​படுத்​தும் வகை​யில், பிரான்ஸ் நாட்​டிலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் ஒயின், ஷாம்​பெ​யின்உள்​ளிட்ட மது​பானங்​களுக்கு 200 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்​துள்​ளார். சர்​வ​தேச அளவில் ஏற்​படும் மோதல்​களுக்கு தீர்வு காணும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘போர்டு ஆப் பீஸ்' என்ற அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளார். ஐ.நா. சபைக்கு போட்​டி​யாக அவர் இந்த அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த அமைப்​பில் சேர...
வெனிசுலா, கனடா மற்​றும் கிரீன்​லாந்தை அமெரிக்​கப் பகு​தி​களாகக் காட்டும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளி​யிட்​டுள்​ளார். உலகின் அதிக எண்​ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கப் படைகள், அந்​நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்​றது. மேலும், அந்​நாட்டை அமெரிக்கா நிர்​வாகம் செய்​யும் என்​றும் அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதைத் தொடர்ந்​து, டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்​சிப் பகு​தி​யாக விளங்​கும்...
“கிரீன்​லாந்தை விலைக்கு வாங்​கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் டென்​மார்க், பிரிட்​டன், பிரான்ஸ் ஆகிய நாடு​களுக்கு கூடு​தலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்​துள்​ளார். டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்சி பெற்ற பிராந்​தி​ய​மாக கிரீன்லாந்து உள்​ளது. இந்​நிலை​யில், ஆர்க்​டிக் பகு​தி​யில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்​யா​விடம் இருந்து அமெரிக்​காவைப் பாது​காக்க, எங்களுக்கு கிரீன்​லாந்து வேண்​டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​னார். மேலும், கிரீன்​லாந்​தில்...
தெற்கு ஸ்பெயினில் உள்ள அடாமுஸ் நகரத்துக்கு அருகே நேற்று (ஞாயிறு) மாலை இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது நாட்டுக்கு ஆழ்ந்த வேதனை நிறைந்த இரவு...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக...
ஐ.​நா. சபைக்கு மாற்​றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்​ளார். இந்த புதிய அமைப்​பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்​பின​ராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் அமைப்​புக்​கும் இடையே போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர்...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை என்றும், அதேநேரத்தில் மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளன என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசும் இது தொடர்பாக தனது கவலையை வங்கதேச...