இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
போர் மிகக் கொடூரமானது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. பிள்ளை மனம் மாறாத மழலைகள் சிலர், பொம்மை ஒன்றை இறுதிச் சடங்குக்கு அந்த வீடியோவில் கொண்டு செல்கின்றனர். வழக்கமாக பொம்மையைக் கொண்டு விளையாடும் உலக அளவிலான குழந்தைகளுக்கு...
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது அமெரிக்கா: நிலவை சுற்றி வரவுள்ள 4 விண்வெளி வீரர்கள்
admin - 0
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா...
குவைத்தில் மேற்காசிய போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலையில் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில்...
ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985-ம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல்...
நேட்டோ ஒரு ‘காகிதப் புலி' என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் இணைய வேண்டும் என்றும் இதற்காக தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்காக ஈரானுக்கு எதிராக போரிடும் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணையத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையின்படி, இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு...
சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே இன்று (மார்ச் 30) நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
ஏர் சைனா விமானத்தை, வட கொரியாவுக்கான சீனத் தூதர் வாங் யஜுன் மற்றும் பிற தூதர்கள் வரவேற்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து...
“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சார்ந்த 20 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலவந்தி வழியாக கடந்து...
ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் நேற்று 31-வது நாளாக நீடித்தது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்....
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று அளித்த பேட்டியில் அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறியதாவது: யுஏஇ ஒரு அர்த்தமற்ற குழப்பத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது உறவின் மூலம் செய்த...










