அதிகம் வளருவோம், அதிகம் சாதிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மிக விரைவாக வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கு உழைத்து வருகிறோம் என இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய நாடு​களில் பிரதமர் மோடி அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​தோ​னேசி​யப் பயணத்தை முடித்​துக்​கொண்டு அவர் 8-ம் தேதி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​தார். மெல்​போர்​னில் அந்​நாட்​டுப் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ், கவர்​னர் ஜெனரல் சாம்...
துருக்​கி​யில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்​துக் கொண்டு அமெரிக்கா திரும்​பிய அதிபர் ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்​தாண்டு ஏற்​பட்ட மோதலில் 11 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இது அணு ஆயுத போராக மாறும் நிலை ஏற்பட்​டது. போரை நான்​தான் தடுத்து நிறுத்​தினேன். இந்த மோதலை நிறுத்​தி​யதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி மக்​களின் உயிரைக்...
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்குதல்களை நடத்​தி​யுள்​ளது. இதற்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​களை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதன் ​மூலம் வளை​கு​டாப் போரை முடிவுக்​குக் கொண்டு வர எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் பின்​னடைவைச் சந்தித்​துள்​ளன. ஹார்​முஸ் நீரிணை​யில் கப்​பல்​கள் மீது ஈரான் அண்​மை​யில் தாக்குதல் நடத்​தி​யது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இரண்டு நாள் வான்​வழித் தாக்​குதல்​களில் ஈரானில்...
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும்...
“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுகிறது. அவர்கள் பொய்யர்கள். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து டொனால்டு டரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது....
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல் விலை 74.5 டாலராக விற்பனையாகி வருகிறது. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டரம்ப், “என்னை பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட...
ஈரான் மீது இன்று இரவும் கடுமையான தாக்குதல் நடத்துவோம். கார்க் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நிறைவுற்றதாக ட்ரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஈரான் மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக...
ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்த நாட்​டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ‘‘ஈரானுட​னான போர் நிறுத்த ஒப்​பந்​தம் முறிந்​து​விட்​டது. ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது வீணானது’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்​தம்...
 காலிஸ்​தான் பிரி​வினை​வா​தி​யான ஹர்​தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடி​யுரிமை பெற்று அந்​நாட்​டில் வசித்து வந்​தார். தடை செய்​யப்​பட்ட காலிஸ்​தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலை​வ​ராக இருந்த நிஜ்ஜார் தீவிர​வா​தி​ என கடந்த 2020-ல் இந்​தியா அறி​வித்​தது. இந்​நிலை​யில் கடந்த 2023 ஜூனில் கனடா​வின் சர்ரே நகரில் முகமூடி அணிந்த இரு​வ​ரால் நிஜ்ஜார் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
இந்​தோ​னேசி​யா​வில் ஐஐஎம் (பெங்​களூரு) வளாகம் அமைக்​கப்​படும் என்று அந்​நாட்டு தலைநகர் ஜகார்த்​தா​வில் பிரதமர் நரேந்​திர மோடி அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று அறி​வித்​தார். அத்​துடன், பாது​காப்​பு, கல்​வி, தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்​வெளித் துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்பட முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தோனேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். முதல் கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில்...