ஈ​ரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்​குதல்: வளைகுடா நாடுகள் மீது டெஹ்​ரான் பதிலடி

0
12

ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்குதல்களை நடத்​தி​யுள்​ளது. இதற்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​களை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதன் ​மூலம் வளை​கு​டாப் போரை முடிவுக்​குக் கொண்டு வர எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் பின்​னடைவைச் சந்தித்​துள்​ளன.

ஹார்​முஸ் நீரிணை​யில் கப்​பல்​கள் மீது ஈரான் அண்​மை​யில் தாக்குதல் நடத்​தி​யது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இரண்டு நாள் வான்​வழித் தாக்​குதல்​களில் ஈரானில் 14 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்; 78 பேர் காயமடைந்​துள்​ளனர். 90 இலக்குகள் மீது தாக்​குதல் அமெரிக்க ராணுவத்​தின் மத்​திய கட்டளைப் பிரிவு, ஈரான் முழு​வதும் சுமார் 90 இலக்​கு​களைத் தாக்கிய​தாகத் தெரி​வித்​துள்​ளது.

உலகின் ஒட்​டுமொத்த எரிசக்தி வர்த்​தகத்​தில் ஐந்​தில் ஒரு பங்கு கடந்து செல்​லும் ஹார்​முஸ் நீரிணை​யில், கப்​பல் போக்​கு​வரத்தின் சுதந்​திரத்​திற்கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தும் ஈரானின் நடவடிக்​கைகளை சீர்​குலைப்​பதே இந்​தத் தாக்​குதல்​களின் நோக்கம் என்று அமெரிக்கா கூறி​யுள்​ளது.

ஈரானின் அணுமின் நிலைய வளாகம் அமைந்​துள்ள புஷெஹ்ர், சாபஹார் உள்​ளிட்ட பல முக்​கிய துறை​முக நகரங்​களில் குண்​டு​வெடிப்​பு​கள் நிகழ்ந்​த​தாக அந்​நாட்டு ஊடகங்​கள் தெரிவித்துள்ளன. மேலும், முதன் ​முறை​யாக ஈரானியப் பாலங்களை​யும் அமெரிக்கா இலக்கு வைத்​துள்​ளது. துருக்​கி​யில் நடை​பெற்ற நேட்டோ உச்​சி​மா​நாட்​டில் கலந்து கொண்டு வந்த பிறகு, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் ஈரானில் நிகழ்ந்த குண்​டு​வெடிப்​பு​கள் என்று கூறி சில வீடியோக்​களைப் பகிர்ந்துள்ளார். ஈரானுக்கு மற்​றொரு எச்​சரிக்​கை​யை​யும் விடுத்துள்​ளார்.

“கப்​பல்​கள் மீது ஈரான் நடத்​திய குண்​டு​ வீச்​சுக்கு பழி​வாங்​கும் நடவடிக்கை இது. இச்​செயல் மீண்​டும் நடந்​தால், நிலைமை இன்னும் மோச​மாகும்” என்று ட்ரம்ப் எச்​சரித்​துள்​ளார். மேலும், மின் உற்​பத்தி நிலை​யங்​கள் மற்​றும் கடல் ​நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் உள்​ளிட்ட ஈரானின் பொது உள்​ கட்​டமைப்​பு​களைத் தாக்கு​வதற்​கும், எண்​ணெய் உற்​பத்​தி​யின் முக்​கிய மைய​மான கார்க் தீவைக் கைப்​பற்​று​வதற்​கும் தான் விடுத்த பழைய அச்சுறுத்​தல்​களை டிரம்ப் மீண்​டும் கையில் எடுத்​துள்​ளார்.

போரை நிறுத்​து​வதற்​கான தற்​காலிக ஒப்​பந்​தம் “முடிந்​து​விட்​டது” என்று ட்ரம்ப் கூறி​னார். இதற்​குப் பதிலளித்த ஈரானின் நாடாளுமன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாஃப், “நீங்​கள் தாக்​கி​னால், உங்​களுக்​கும் அடி விழும்” என்று எக்ஸ் தளத்​தில் சவாலாகப் பதி​விட்​டுள்​ளார்.

பிப்​ர​வரி 28 அன்று கொல்​லப்​பட்ட கமேனி​யின் இறு​திச் சடங்குகளுக்​குப் பிறகு, நீரிணையை முழு​மை​யாக மீண்​டும் திறப்​பது மற்​றும் அணு சக்​தித் திட்​டம் உள்​ளிட்ட முக்​கிய​மான விஷ​யங்​கள் குறித்து இருதரப்​பும் பேச்​சு​வார்த்தை நடத்தவிருந்தது குறிப்பிடத்தக்​கது.

இந்​நிலை​யில் உலக சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை கணிசமாக உயர்ந்​ததுடன், ஒட்​டுமொத்த மத்​திய கிழக்​கிலும் மீண்​டும் போர் வெடிக்​குமோ என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. சர்வதேச நீர்​வழி​யில் வணி​கக் கப்​பல்​களைத் தாக்​கியதற்​குப் பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு அமைப்​பு​கள், ரேடார்​கள் மற்​றும் புரட்​சிகரக் காவல்​ படை​யின் 60-க்​கும் மேற்​பட்ட சிறிய படகு​களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்​துள்​ளது.

கப்​பல்​கள் மீதான ஈரானின் தாக்​குதலைத் தொடர்ந்​து, தற்​காலிக ஒப்​பந்​தத்​தின் கீழ் ஈரானுக்கு வழங்​கப்​பட்​டிருந்த அமெரிக்க டாலர்​களில் பகிரங்​க​மாக எண்​ணெய் விற்​பனை செய்​யும் உரிமத்தை அமெரிக்கா அதிரடி​யாக ரத்து செய்​துள்​ளது. இதன் விளை​வாக ஈரான் இனிமேல் உலக சந்​தை​யில் வெளிப்​படை​யாக எண்​ணெய் விற்​பனையை டாலர்​களில் சம்​பா​திக்க முடி​யாது. இதனால்​ ஈரானுக்​குப்​ பொருளா​தா​ர ரீதி​யாக மிகப்​பெரிய நெருக்கடி ஏற்​படும்​ சூழலும் ஏற்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here