இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் கருத்து

0
11

துருக்​கி​யில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்​துக் கொண்டு அமெரிக்கா திரும்​பிய அதிபர் ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்​தாண்டு ஏற்​பட்ட மோதலில் 11 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன.

இது அணு ஆயுத போராக மாறும் நிலை ஏற்பட்​டது. போரை நான்​தான் தடுத்து நிறுத்​தினேன். இந்த மோதலை நிறுத்​தி​யதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி மக்​களின் உயிரைக் காப்​பாற்​றிய பெருமை ட்ரம்ப்​பையே சேரும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்​டி​னார்.

உண்​மை​யில், இந்​தியா – பாகிஸ்​தான் போர் உட்பட 8 போர்​களை நான் தடுத்து நிறுத்​தினேன். இதற்​காக அமை​திக்​கான நோபல் பரிசு எனக்கே கிடைத்​திருக்க வேண்​டும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார். தனது தலை​யீட்​டால் இந்​தியா – பாகிஸ்​தான் மோதல் முடிவுக்கு வந்​த​தாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார்.

ஆனால், இரு நாட்டு ராணுவங்​களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்​சு​வார்த்​தையைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக இந்திய அரசு கூறியது. மேலும் இந்த மோதலில் எப்​-16 உட்பட பாகிஸ்​தான் விமானப்​படை​யின் ஒரு டஜன் விமானங்​கள் அழிக்​கப்​பட்​ட​தாக இந்​தியா கூறியது. ஆனால் எந்த நாட்டு போர் விமானங்​கள் என குறிப்​பி​டா​மல் 11 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here