தங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். அவர்களோ ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.
அமெரிக்கா...
கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார்....
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருளுடன் சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரிட்டிஷ் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்த அண்மைய தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்புவது...
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு டெஹ்ரானில் நடைபெற்றது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்தில் 13 நாடுகள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டன. ஆனால் இதையும் மீறி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய அரசுக்கும், அம்மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” என கூறப்பட்டு...
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றதற்கும், அமெரிக்காவில் அதானி குழுமத்தின் ரூ.95,000 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்க நீதித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதானி குழுமம் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெறுவது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்து அமெரிக்க முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ஆர். ட்ரெண்ட்...
“இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை" என்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸின் கூற்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு இல்லை என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்தார். அதோடு, கடந்த மூன்று மாதங்களாக இஸ்ரேலைப் பாதுகாக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்க...
இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் நேற்றும் இன்றும் நிகழ்ந்த கைதிகளின் மோதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக...
அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்ட அவர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவை வந்தடைந்தார். பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான்பரப்புக்குள் நுழைந்ததில் இருந்தே, இந்தோனேசிய விமானப் படையின்...
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி: நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர தீவிரம்
admin - 0
பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரூ.14,000 கோடிக்கும் அதிகமான பிஎன்பி வங்கி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் நீரவ் மோடி முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில்...
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்ததால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறவில்லை.
தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள சூழலில், தலைநகர் டெஹ்ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று முன்தினம்...









