ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச்​சடங்கு பிரார்த்​தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான மக்கள் திரண்டு அஞ்​சலி செலுத்​தினர். கமேனி​யின் மகன்​களான முஸ்​த​பா, மீசம் மற்​றும் மசூத் கமேனி ஆகியோர் இறு​திச்​சடங்​கில் பங்​கேற்​றனர். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாடாளு​மன்ற சபா​நாயகர் மற்​றும் புரட்​சிகர பாது​காப்​புப் படை (ஐஆர்​ஜிசி) தளபதி ஆகியோ​ரும் இதில் கலந்து கொண்​டனர். இருப்​பினும், கடந்த மார்ச் மாதம் ஈரானின் புதிய...
ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயதுல்லா அலி கமேனி​யின் இறு​திச்​சடங்​கில் கூடி​யிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்​டில் அமெரிக்​கா​வால் கொல்ல முடி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசி​யதற்கு ஈரான் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஆர்​மீனி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலை​தளப் பக்க பதி​வில், “மனிதர்​களை வேண்டு​மா​னால் குண்டு வீசி கொல்ல முடி​யும், ஆனால் அவர்களின் மனதில் திட​மாக பதிந்​துள்ள கொள்​கைகளை ஒரு போதும்...
இலங்கை​யின் மேற்​குக் கடற்​கரை நகர​மான நீகும்​போ​வில் உள்ள சிறை​யில் நேற்று ஏற்​பட்ட மோதலில் இரு​வர் உயிரிழந்​தனர். இந்த ​சிறை​யில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இ​தில் இரு கைதி​கள் கொல்​லப்​பட்​டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதி​கள் மருத்​து​வ​மனைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்​. இந்த மோதலின்போது, சிறையில் டெங்கு காய்ச்​சல் பரவுவதைக் கண்​டித்து பெண் கைதிகள் குழு ஒன்று...
செங்​கடலில் ஏமன் நாட்டு கடற்​கரைக்கு அருகே சென்று கொண்​டிருந்த சரக்​குக் கப்​பல் ஒன்​று, அடையாளம் தெரி​யாத ஆயுதமேந்​திய மர்​மக் கொள்​ளை​யர் கும்பலால் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யிருப்​ப​தாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரி​வித்​துள்​ளது. ஏமனின் கடலோர நகர​மான ஹொடை​டா​விற்கு தென்​மேற்கே 30 கடல் மைல் (சு​மார் 55 கிலோமீட்​டர்) தொலை​வில் இத்​தாக்​குதல் நடந்​துள்​ள​தாக பிரிட்​டன் கடல்​சார் வர்த்தக நடவடிக்​கைகள் அமைப்பு தெரி​வித்​துள்​ளது. தங்​களுக்கு நேர்ந்த இந்​தத் தாக்​குதல் குறித்து கப்​பல் ஊழியர்​களே அதி​காரப்​பூர்​வ​மாகத்...
இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டிட்வா புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், பெரும் சேதமும் ஏற்பட்டது. ஏற்கெனவே, பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டிட்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து...
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிலர் மோட் டார் சைக்கிள் திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, மின்சாரக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத் தில் அவர்களது உடல் டேப்பால் ஒட்டப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஜாலிஸ்கோவின் பல பகுதிகளில் இது போன்று மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், டேப் மூலம் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கண்...
‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தொடங்கிய போரிலிருந்து இதுவரை பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அத்துமீறல்கள், கொடூரங்கள் குறித்து ஐ.நா.வின் சுதந்திரமான சுயாதீன சர்வதேச...
தாய்​லாந்​தின் முக்​தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலை​வில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அவர்​கள் மீது 11 வயது சிறு​வன் ஓட்டி வந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதி​ய​தில் 5 துறவி​கள் அதே இடத்​தில் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த பல துறவி​கள் மருத்து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயி​ரிழந்​தனர்....
 உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் 18 பேர் உயி​ரிழந்​தனர். ரஷ்​யா​வின் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வந்​தது. இதன் காரண​மாக ரஷ்​யா​வில் கடந்த 4 ஆண்​டு​களில் இல்​லாத அளவுக்கு எரிபொருள் தட்​டுப்​பாட்டை ஏற்​படுத்​தி​யது. எனவே, உக்​ரைனுக்கு மிகப் பெரியள​வில் பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு செய்​தது. உக்​ரைன் மீது நேற்று முன்​தினம் இரவு 74...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. 3 நாட்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து முடிவுக்கு வந்தது. அப்போது முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தூதரக அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருநாட்டு விமான போக்குவரத்துக்கு எல்லையில் வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் மக்கள் இந்தியா வருவதும், சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புனித பயணம் செல்வதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 61...