இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீகும்போவில் உள்ள சிறையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்த சிறையில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இரு கைதிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மோதலின்போது, சிறையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கண்டித்து பெண் கைதிகள் குழு ஒன்று கட்டடத்தின் மேற்கூரையில் ஏறி போராட்டம் நடத்தியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையின் சிறப்புப் படைப்பிரிவு அழைக்கப்பட்டது.















