சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை உள்ள நிலையில், இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய பயணத்துக்கு முன்பாக டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய தகாய்ச்சி, “சர்வதேச சூழலில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை விழுமியங்களையும் நட்புறவின் நலன்களையும் பகிர்ந்துகொள்ளும் இந்தியா உடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சர்வதேச நிலையை...
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "இந்தியாவுடன் மற்றொரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிலைக்கு மிக அருகில் வந்துள்ளோம். இந்த...
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 1,500 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடமும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜூன் 24 அன்று மாலை சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 7.1 ரிக்டர் அளவு கொண்ட முதல் நிலநடுக்கம், தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவில், 22 கிலோமீட்டர் ஆழத்தில்...
பணமோசடி தடுப்பு மற்​றும் தீவிர​வாத நிதி​யுதவி தடுப்பு (ஏஎம்​எல்​/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரு​கிறது. இந்த கண்​காணிப்பு அமைப்​பின் நிதி நடவடிக்கை பணிக்​குழு (எப்​ஏடிஎப்) கூட்​டம் வரும் அக்​டோபரில் நடை​பெற உள்​ளது. இதில், தீவிர​வாதத்தை ஊக்​குவிக்​கும் நாடு​களை ‘சாம்​பல் பட்​டியலில்' (Grey List) சேர்ப்​பது மற்​றும் ஏற்​கெனவே இப்​பட்​டியலில் உள்ள நாடு​களை அவற்​றின் செயல்​பாட்​டின் அடிப்​படை​யில் விடுவிப்பது குறித்து முடிவு செய்​யப்​படும். தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்தான் ஏற்​கெனவே...
அமெரிக்க மண்​ணில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு வழங்​கப்​படும் தானி​யங்கி பிறப்புரிமை குடி​யுரிமை​யைக் கட்டுப்படுத்​தக் கோரி அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்​பித்த நிர்​வாக உத்​தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி​யாக நிராகரித்துள்​ளது. அமெரிக்க அரசி​யலமைப்​பின் 14-வது திருத்​தத்​தின்​படி, 1868-ம் ஆண்டு முதல் அந்​நாட்டு மண்​ணில் பிறக்​கும் பெரும்​பாலான குழந்​தைகளுக்​குத் தானாகவே குடி​யுரிமை வழங்​கப்​பட்டு வருகிறது. இந்த நடை​முறையை மாற்றி அமைக்​கும் நோக்​கில், அதிபர் டிரம்ப் நிர்​வாக உத்​தரவு ஒன்​றைப் பிறப்​பித்​திருந்​தார். தற்​போதைய குடி​யுரிமை கொள்​கையை...
வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்​தடுத்து ஏற்பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்கு பின் தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது மீட்பு பணியில் சற்று நம்பிக்கை தந்துள்ளது. தென் ​அமெரிக்க கண்​டத்​தில் வெனிசுலா அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் யாராகுய் மாகாணம், சான்​பெலிப் நகரில் கடந்த புதன்​கிழமை மாலை 6 மணி அளவில் (இந்​திய...
சவுதி அரேபி​யா​வின் அராம்கோ நிறு​வனத்​துக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர் நேற்று விபத்​தில் சிக்​கியது. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர். உலகிலேயே கச்சா எண்​ணெய் அதி​கம் ஏற்​றுமதி செய்​யும் நாடு சவுதி அரேபி​யா. இங்கு கச்சா எண்​ணெய்யை சுத்​தி​கரித்து ஏற்​றுமதி செய்​வ​தில் சவுதி அரசின் அராம்கோ நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. இதன் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள், ஹார்​முஸ் ஜல சந்​தி​யின் மேற்கு கடலோர பகு​தி​யான ராஸ் தனுரா என்ற பகு​தி​யில் அமைந்​துள்​ளன. ஈரான் போர்...
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது. பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க...
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருப்பது பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு என்று ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி நன்றி...
ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது. இதில் பிரான்சில் மட்டும், வெப்பம் உச்சத்தில் இருந்த மூன்று நாட்களில் வழக்கமான மரணங்களை விட 1,000 கூடுதல்...