ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
டைம்ஸ் யுகேவின் செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மொஜ்தபா காமேனி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு கோம் நகரில் தீவிர...
போர் விமானத்திலிருந்து காணாமல் போன அமெரிக்க விமானியை ஈரானுக்குள் புகுந்து மீட்டோம்: ட்ரம்ப்
admin - 0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒரு விமானி பத்திரமாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார்.
இந்த சூழலில்...
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. இதில் அந்த நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதற்கு...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்துள்ளன. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்கத் தடைகள்...
அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: விமானி மீட்பு விளக்கத்துக்கு ஈரான் பதிலடி
admin - 0
அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார்” என ஈரான் பதிலளித்துள்ளது.
ஈரானின் பிரஸ் டிவியில், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியதாவது: தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப்...
அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இதை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்ததாக 25 வயதுடைய பிரிட்டன் விமானப் பணிப்பெண் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தியின்படி, அந்தப் பெண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அந்தப் புகைப்படத்தைப்...
நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள்...
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளது.
உலகின் 20% எரிசக்தி விநியோகம் நடைபெறும் முக்கிய வழித்தடமான...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன....










