கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெண்களை விட திருமண வயதில் உள்ள ஆண்கள் சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளனர். இதனால், அவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோத தரகர்கள் மூலம் பெண்களை மணம் முடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
சீன உச்ச நீதிமன்றத்தகவல்படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்டும், திருமண மோசடி மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபட்ட 1,546 பேர்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் ஜெனிவாவில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைகள் கவலை அளிக்கின்றன. அங்குள்ள கூட்டு அவாமி போராட்டக் குழுவை (ஜேஏஏசி) சேர்ந்தவர்கள்...
வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம் பலாஷ்பாரி என்ற இடத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து வங்கதேச சிறுபான்மையின அமைப்புகள் தாகாவில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் முன்பாக நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமர் சிலை கட்டுவதை தடுக்கவே இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகச்...
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் ஆன்லைன் சூதாட்டம்: வெள்ளை மாளிகை ரகசியங்கள் கசிந்ததா?
admin - 0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான டாலர்கள் லாபம் ஈட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நிர்வாகத்தின் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி பாலிமார்க்கெட் மற்றும் கால்ஷி போன்ற ஆன்லைன் வர்த்தக மற்றும்...
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 17ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பிறகு தங்கள் எல்லையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று ஈரான் ராணுவம்...
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த இரண்டு வெவ்வேறு படகுகள் கடலில் மூழ்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அகதிகள் முகமை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச இடப்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் முகமை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களும், வங்கதேசத்தின் காக்ஸ் பசாரில் உள்ள...
மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகுகளில் மலேசியாவுக்கு புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்கும் மேற்பட்டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். அப்போது அங்கு இனப் படுகொலை நடைபெற்றது. சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் மியான்மரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் மியான்மரின்...
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சோமாலிய கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்ணெய்க் கப்பல்களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்பலும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டன.
கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக சரக்கு கப்பலில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் துப்பாக்கி...
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
admin - 0
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஈரான் மீது கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரான் கடற்பகுதியை...
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம் மற்றும் பிற முக்கிய சர்வதேச நட்பு நாடுகள், நிதி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.
ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் ஆகிய...









