ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
admin - 0
சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் மற்றும் பாப்-எல்-மந்தீப் ஜலசந்தி வழியே செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மட்டுமின்றி, சவூதி அரேபியாவின் முக்கிய...
பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.
பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற ஸ்டார்மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர்...
ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
மேலும், தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ், தெற்கு கடற்கரையில் உள்ள கொனார்க், சபஹார் பகுதிகளிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன....
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்தார். அவருடனான சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "நாங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது" என்று தெரிவித்தார்.
ஈரானின் ராணுவத் திறனைக்...
உக்ரைனில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
admin - 0
உக்ரைன் கடல் பகுதியில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
‘எம்.வி.கோல்டன் லியோ’ என்ற வணிகக் கப்பல் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகளுடன் சோளம் ஏற்றிக் கொண்டு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தக் கப்பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள்...
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா பாலா சிலுகுரி தம்பதியருக்கு 4-வது குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்ககெவே, இந்தத் தம்பதிக்கு ஈவான் (9 வயது), விவேக் (6 வயது) என்ற இரண்டு ஆண் குழந்தைகளும்,...
உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இது...
ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த ஒரு வாரமாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் உள்கட்டமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் 517 பேர் காயம் அடைந்ததாகவும் ஈரான்...
ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள், சித்திரவதை, சுரண்டல், சம்பளம் வழங்கப்படாதது போன்ற இன்னல்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார் எழுகிறது.
இத்தகைய இன்னல்கள் காரணமாக பணியிலிருந்து வெளியேறிய பெண் தொழிலாளர்கள் மஸ்கட் நகரில் இந்திய தூதரக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் சமீபத்தில் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
அவர் அளித்த புகாரில், ‘‘நல்ல சம்பளம் தருவதாக கூறி தன்னை வீட்டு வேலைக்கு மஸ்கட் அழைத்து...
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரே பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவர் வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) பதவியேற்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆன்டி புர்ன்ஹாம் ஏற்கெனவே கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆன்டி...









