Google search engine
ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார். “ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது....
காசா பகுதியில் போர்நிறுத்தம்; பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எகிப்து அதிகாரி மற்றும் ஹமாஸ் அதிகாரி என இருவர் இந்தத் தகவலினை உறுதி செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார். என்றாலும் ஒப்பந்தத்தின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது....
நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). அவரது 95-வது பிறந்தநாளில் அவரைப் போற்றும் வகையில் அவருடைய சக்திவாய்ந்த, பிரபலமான மேற்கோள்கள் சிலவற்றை நினைவுகூர்கிறோம். உண்மையான சமாதானம் என்பது பிரச்சினைகள் இல்லாமை அல்ல; மாறாக நீதி நிலவுதலே உண்மையான சமாதானம். நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது நாம் கையறு நிலையில், ஆடையற்று, நிற்கதியாக இருக்கச் செய்யப்படுகிறோம். மனம் அடிமைப்பட்டு கிடக்கும் வரை...
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயிலிருந்த தங்களது சொகுசு வீடுகளை பாதுகாக்க அங்குள்ள கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரியவந்துள்ளது....
சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலம் முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையை அந்த நாட்டு மக்கள் இழந்துள்ளனர். பொருளாதார தேக்கநிலை, வேலையின்மை, சர்வாதிகாரம், மத சுதந்திரம் மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ உருவானது குறித்தும், அது வேகமாக பரவியது குறித்தும் பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென 50,000...
தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. இந்நிலையில் இங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் காட்டுத்...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது. கடந்த 7-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத்...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. காற்றின் வேகம் அதிகமானதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். பள்ளத்தாக்கில் வீரர்கள் தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து...
ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான...