Google search engine
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில் அவருக்குப் பிறகு துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வான்ஸ் அதிக கவனம் ஈர்த்தார். அமெரிக்காவில் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். விழாவில் இவரது மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் ஈவன், விவேக், மிராபெல் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் குழந்தைகளின் சில...
துருக்கியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர். துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டல் உள்ளது. 12 தளங்களைக் கொண்ட இதில் உள்ள உணவக பகுதியில் நேற்று அதிகாலையில் தீப்பிடித்துள்ளது. பின்னர் அந்தக் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை...
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய...
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் திருச்சூரின் தையூரை சேர்ந்த சிபி ஓசெப், எர்ணாகுளத்தை சேர்ந்த சந்தீப் தாமஸ், சாலக்குடியை சேர்ந்த சுமேஷ் ஆன்டனி ஆகிய 3 பேரை போலீஸார் பல்வேறு...
கடந்த 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளதாக உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியர் டாலர் லாபம் பார்த்துள்ளது. இந்த தொகையை கொண்டு பிரிட்டஷ் 50 பவுண்டு நோட்டுகள் மூலம் லண்டனில் கம்பளமாக விரித்தால் அந்த...
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72), தெஹ்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2022-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் விண்ணில் ஏவுப்பட்ட 8-வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. அதன் பூஸ்டர் வெற்றிகரமாக ஏவுதளம் திரும்பியது. தொலைதூர கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ‘ஸ்டார்ஷிப் ’ என்ற மெகா ராக்கெட்டை விண்ணில் ஏவும் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட முதல் பரிசோதனை வெற்றி பெற்றது. நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தோல்வியடைந்தது. இதன் 7-வது பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது....
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (ஞாயிறு) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. 3 கட்டங்களாக.. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு...
ஏமனின் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேதத்தை...