Google search engine
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூயார்க்கில் உள்ள நசாவு கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தஅயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்திருந்த மைதானத்தை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஹர்திக்...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் ஆல்ரவுண்ட் திறனால் ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில்முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் பிலால் கான் பந்திலும், கேப்டன் மிட்செல்...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வென்றது அமெரிக்கா. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 159 ரன்கள் எடுத்தன. ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20...
யுவா கபடி தொடரின் தமிழக கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் - கற்பகம் பல்கலைக்கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்க முதல் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் பல்கலைக்கழகம் 49-19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிரெய்டின் வாயிலாக 23 புள்ளிகளையும்,...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தது. “நாங்கள் பேட் செய்த போது முதல் ஆறு ஓவர்களை சிறப்பாக கையாளவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக ரன் எடுப்பதும், பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியமானது. பந்துவீச்சிலும் எங்களுக்கு இதே நிலை தான்....
வரும் 9-ம் தேதி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது. “மற்ற எல்லா போட்டிகளை விடவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. இந்தப் போட்டி வீரர்கள்...
நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்' வகைப்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் டி பிரிவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. தென் ஆப்பிரிக்க அணியானது கேப்டன் எய்டன் மார்கிரம் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியானது ஹெய்ன்ரிச் கிளாசன்,...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 137 ரன்கள் என்ற இலக்கை பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக போராடி எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸின் ஆட்டம் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது. கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது....
இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்களுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா...