நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக இழந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
பெங்களூரு ஆடுகளத்தில் வானிலையும், டாஸில் எடுத்த முடிவும் எதிர்வினையாக அமைந்ததாக தோல்விக்கான காரணத்தை கற்பித்தது இந்திய அணி. தொடர்ந்து புனே டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சாண்ட்னரிடம் இந்திய அணி சரணடைந்தது. அப்போது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை...
3-வது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி: முழுமையாக தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை
admin - 0
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு 0-3 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதையடுத்து சுழற்பந்து வீச்சில் தடுமாறத் தொடங்கியுள்ளது என்ற விமர்சனம் இந்திய அணி மீது எழுந்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2-வது...
மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது.
நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்தை விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் கேட்ச் பிடித்தார். நியூஸிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்க, கள நடுவர்...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு வரை இந்திய அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ளதால் இந்திய அணி முதலிடத்தை இழந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது 58.33 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி,...
இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் 1933-ம் ஆண்டில் விளையாடத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 91 ஆண்டுகளான நிலையில், இந்திய அணி முதன்முறையாக 0-3 என்ற கணக்கில் தொடரை உள்நாட்டில் முழுமையாக இழந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு, புனே மற்றும் மும்பை என மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது. உள்நாட்டில்...
‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ – தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ
admin - 0
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது சாதாரண விஷயமல்ல. இந்த தொடரில் நான் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தொடரை முழுமையாக இழந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என்பதே உண்மை....
புது டெல்லி: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: உள்ளே > ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). செலவிட்ட தொகை: ரூ.65 கோடி |...
எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன....
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீரர்கள் மற்றும் 8 ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தொடர் வரும் நவம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற உள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இதுவரை இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், ரஷ்யாவின்...
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள்.
சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக...









