3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

0
396

இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61, ஷெமைன் காம்ப்பெல் 46 ரன்கள் சேர்த்தனர். இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்களையும், ரேணுகா சிங் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 28.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29, பிரதிகா ராவல் 18, ஸ்மிருதி மந்தனா 4, ஹர்லின் தியோல் 1 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். தீப்தி சர்மா 39, ரிச்சா கோஷ் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. முதல் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here