ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் உள்ள சத்தீஸ்கர் - தமிழ்நாடு அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது. இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி...
 நியூஸிலாந்து மகளிர் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 96 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா பிலிமெர் 39,...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா, ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 2...
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியின் இந்த திடீர் சரிவு மற்ற அணிகளுக்கான வாய்ப்பின் கதவுகளை திறந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 62.82 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது....
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை விருதை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி. தனது தேசிய அணி மற்றும் கிளப் அணியில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 2023-24 பிரீமியர் லீக் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி பட்டம் வெல்லவும், யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் அவரது ஆட்டம் உறுதுணையாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும்...
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நிறைவுற்ற இப்போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 24 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. இந்திய வீரர் சிவராஜன் சோலைமலை ஒற்றையர் எச்எச்6 கிளாஸ் பிரிவில் தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் சிவராஜன், சுதர்சன்...
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும். அதை தற்போது நியூஸிலாந்து அணி செய்துள்ளது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஓர்...
புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி கண்டார். பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார். இதில் கியன்டியான்யி 11-8,...
புதுடெல்லி: சேதேஷ்வர் புஜாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லாததால் தோல்வி அடைந்து வருகிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே, தொடர்ந்து 2...
சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அணியில் முகமது ஷமி இடம்பெறாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி அண்மையில்...