துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓர் இடம் பின்தங்கி 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ்...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் அமீன் தபதாபேயி 45-வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார். இந்திய கிராண்ட் மாஸ்டரான...
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா...
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்த விதித் குஜராத்தியுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடனும், விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இதில் 96-வது நகர்த்தலின் போது அர்ஜுன் எரிகைசி வெற்றியை...
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத முறைசாரா உரையாடலுக்குப் பிறகு ஒரு லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது. இந்த கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த அக்டோபர்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் முகமது ரிஸ்வான் 44, பாபர் அஸம் 37, இர்பான் கான் 22, ஷாகீன் ஷாஅப்ரிடி 24 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் நசீம் ஷா 39 பந்துகளில்,...
31 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்தி இரு கோல்கள் அடித்தார் (16 மற்றும் 57-வது நிமிடம்). செல்வராஜ் கனகராஜ் (21-வது நிமிடம்),...
நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக இழந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பெங்களூரு ஆடுகளத்தில் வானிலையும், டாஸில் எடுத்த முடிவும் எதிர்வினையாக அமைந்ததாக தோல்விக்கான காரணத்தை கற்பித்தது இந்திய அணி. தொடர்ந்து புனே டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சாண்ட்னரிடம் இந்திய அணி சரணடைந்தது. அப்போது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை...
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு 0-3 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதையடுத்து சுழற்பந்து வீச்சில் தடுமாறத் தொடங்கியுள்ளது என்ற விமர்சனம் இந்திய அணி மீது எழுந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2-வது...
மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது. நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்தை விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் கேட்ச் பிடித்தார். நியூஸிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்க, கள நடுவர்...