Google search engine
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய...
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர்வரும்27-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டி 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிலீக் சுற்றுடன் வெளியேறி இருந்ததால் கேப்டன் பதவியில் இருந்து...
வீரர்களின் உடல் வலிமை மற்றும் மன உறுதியின் வெளிப்பாடாக திகழும் பளுதூக்குதல் விளையாட்டு 1896-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமானது. 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிருக்கான பிரிவு சேர்க்கப்பட்டது. ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் கிரீஸ் வீரர் பைரோஸ் டிமாஸ் 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1992 முதல் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை அவர் முறையே 82.5, 83, 85 கிலோ...
பெரும்பாலும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக திகழும் டென்னிஸ் ஒலிம்பிக்கில் கவனிக்கப்படக்கூடிய போட்டிகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் டென்னிஸ் வரலாற்றில் கிரேட் பிரிட்டன் 43பதக்கங்களை வென்று வெற்றிகரமான நாடாக உள்ளது. இதில் 17 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கம் அடங்கும். இதற்கு அடுத்தபடியாக 39 பதக்கங்களை வென்று அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. எனினும் இந்த விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற சாதனை அமெரிக்காவின் வசமே...
விளையாட்டு உலகின் பிரம்மாணடத் திருவிழாவான ஒலிம்பிக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று பிரான்ஸில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் தங்கள் நாட்டு கொடியை உயர பறக்கச் செய்து நாட்டு மக்களை மகிழ்விப்போம் என உக்ரைன் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் சூளுரைத்துள்ளனர். அந்த நாட்டின் சார்பில் சிறிய அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்துள்ளது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 140 வீரர்கள், வீராங்கனைகள்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகி உள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா...
1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அறிமுகமானது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இடம் பெற்றது. இதன் பின்னர் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவு கைவிடப்பட்டு அணிகள் போட்டியாக மாற்றப்பட்டது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை சீனா 60 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதேவேளையில்...
டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்குஎதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ளஒருநாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விலகக்கூடும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில்...
குத்துச்சண்டை விளையாட்டு 1904-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு ஓர் அங்கமாக உள்ளது. விதிவிலக்காக ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் குத்துச்சண்டை இடம் பெறவில்லை. ஏனெனில் ஸ்வீடன் சட்டம் குத்துச்சண்டையை தடை செய்யப்பட்ட விளையாட்டாக அறிவித்திருந்தது. 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை அறிமுகமானது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 13 எடைப் பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. ஆடவர்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிதானமாக விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆலி போப் 167 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசினார். பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் சேர்த்தனர்.மேற்கு...