ஜூன் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 10-ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்பட வேண்டும்.
இதில் உள்ள கால அளவைக் கருத்தில்...
நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது...
சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்...
ரயில்வே மின் பாதையில் தொழில்நுட்ப கோளாறு: பரங்கிமலை – பழவந்தாங்கல் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு
admin - 0
பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒன்னே கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். அதிலும், காலை, மாலை வேளைகளில் மின்சார...
தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
admin - 0
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது: மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள் ஒதுக்கி...
அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி, குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை ஆதரித்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழகமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
இம்முறை, நமது மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும்காலங்களில் உங்களின் அன்பையும்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம் என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் சென்னை குருநானக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பேசும்போது, முன்னாள் முதல்வர்...
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்க கூடாது: அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
admin - 0
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எனபல மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்தபோது, 1929-ம் ஆண்டு, ‘தி பாம்பேபர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ (பிபிடிசி) என்ற நிறுவனத்துக்கு, 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. வரும் 2028-ம் ஆண்டுடன் குத்தகை நிறைவு பெறும் நிலையில், அந்த இடத்துக்கு...
அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது ஏன்? – முதல்வர் விளக்கமளிக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
admin - 0
இந்தியாவில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன்? என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மூத்த நிர்வாகி ஏ.வி.துரைராஜ் தலைமையில் நாகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்...
பழநி அருகே தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்கச் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநியிலிருந்து நேற்று காலை தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை நீதிபாண்டியன் (52) ஓட்டினார். பழநி அருகேயுள்ள வேப்பன்வலசு கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சற்றுநேரத்தில் பேருந்தின் முன்பக்கத்தின் இடதுபுற சக்கரம் கழன்று ஓடி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதைக் கண்ட பயணிகளும், சாலையில்...










