பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோதே கழன்று ஓடிய பேருந்து சக்கரம்

0
58

பழநி அருகே தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்கச் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழநியிலிருந்து நேற்று காலை தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை நீதிபாண்டியன் (52) ஓட்டினார். பழநி அருகேயுள்ள வேப்பன்வலசு கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சற்றுநேரத்தில் பேருந்தின் முன்பக்கத்தின் இடதுபுற சக்கரம் கழன்று ஓடி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதைக் கண்ட பயணிகளும், சாலையில் சென்ற மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

நிலைமையை உணர்ந்த ஓட்டுநர், சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் வேறு பேருந்து ஏற்பாடு செய்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here