Google search engine
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த 2011-ம்ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், ‘காக்கி உதவும் கரங்கள்’ குழு மூலம் ரூ.25.49 லட்சம் நிதிதிரட்டினர். ராஜேந்திரனின் மகன்களான முகுந்த் அகிலேஷ் (5) பெயரில் ரூ.11,47,410 மற்றும் சம்ருத் (3) பெயரில் 11,47,253 காப்பீடு செய்தனர். மேலும், ரூ,2,54,831-க்குகாசோலை எடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்...
தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. முன்னதாக பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், துறைகள்...
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய, விடிய விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதன், தொடர்ச்சியாக மேல்வல்லத்தில் உள்ள சார்பதிவாளர் நித்யானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக நித்யானந்தம் உள்ளார். நேற்று புதன்கிழமை...
சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வு குன்னூரில் நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருசைந்திர குமார்கவுரவ் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாய அமர்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 1997-ல் தொடங்கப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) என்ற அமைப்புக்கு மத்திய அரசு 2001-ல் தடை தடை விதித்தது. தொடர்ந்து...
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு செய்யும்வகையில் போக்சோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை ஒவ்வொரு நடவடிக்கையையும் துறை அலுவலர்கள் கண்காணித்து வழக்குகளை விரைவுபடுத்த முடியும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி ஆன்லைனில் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்குக்கு செலுத்தவும்...
தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை கட்டுவதற்கான நிதி ஆதாரங்கள், கட்டுமான அனுமதி போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை இருவார காலத்தில் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதை எதிர்த்து ஆலய வழிபாட்டாளர் சங்கத் தலைவரும்,...
முறையான அறிவிப்பு வராததால், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ செயல்படாமல் முடங்கியுள்ளது. தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. கரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த பெண் கோட்டாட்சியரை, லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: பழனிசாமி: கடந்த ஆண்டு ஏப்ரலில் தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலரை ஆளுங்கட்சி நிர்வாகி ஒருமையில் பேசி...
பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.65 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்காத படத்தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இப்படத்துக்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.30 லட்சத்தை வழங்கவில்லை என்றும், டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட ரூ.27...
மிழக காவல் துறை சார்பில் தேசியஅளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டிகள் நேற்று வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் தொடங்கியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். தமிழக காவல் துறை சார்பில்தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன்...