டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர்: பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் கருத்து
admin - 0
டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்றுதமிழக பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து,...
நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய...
சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப்படையாக வைத்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க உள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர்.
இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர்...
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில்,...
அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை தொகுதியில் சீட் பெற திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார்.மக்களவைத் தேர்தலில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியாவது சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த ஜன.29-ம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை...
பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு: ஓபிஎஸ் இருக்கை மாற்றம்
admin - 0
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.நேற்றைய (பிப்.13) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக...
சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ``முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணித்து அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகிறார். இந்த முதலீடுகள் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை நோக்கி வருகின்றன.
தமிழகத்தில் 36 சதவீதம் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இது. ஆனால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதற்கான புதிய திட்டங்கள் உள்ளதா? ஸ்ரீபெரும்புதூர் பாலம் நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ளது. பணிகளை முடிக்க நடவடிக்கை...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், மலிவு உணவகம் தேவை: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
admin - 0
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசின் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மலிவு விலை உணவகங்களை...
வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
admin - 0
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு வெளியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது: இந்த...
மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. இதன்படி பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கோவை வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழகத்தில் பாஜக 15 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.அதன்படி சட்டப்பேரவை தொகுதி அளவில் பணிக்குழு, பூத் கமிட்டி, பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம்...










