நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தும், அன்று வழக்கில் தொடர்புடைய 14 போலீஸாரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டார்.