அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார்.
அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு...
சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்; அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 7-ஆம் நாள் நீல வானுக்கான...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மா.கவுதமன்,...
இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து வளர்ச்சியடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கத்துக்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவுதலைவர் திவ்யா அபிஷேக் தலைமை தாங்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில்கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் கைது செய்து சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்: சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து இயக்கம்
admin - 0
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும், தாம்பரத் தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்துசெப்.6-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06151) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செப்.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு...
“திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதல்வர் ஸ்டாலின்
admin - 0
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும்...
தமிழகத்தில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா? – போலீஸாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
admin - 0
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்குத் தெரியாதா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017-ம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘‘குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கல்வி,...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: சட்ட நிபுணர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
admin - 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்விலேயே விரைவில் மாநாடு நடைபெறும் எனவும்...
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 முறை...










