Google search engine
பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் 730 தனியார் பண்பலை (எப்எம்) வானொலி சேவை தொடங்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் தனியார் எப்எம் வானொலி சேவைக்கு...
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றன. இப்பொருட்கள் விழாக் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகைதின்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பரிசு பெட்டகத்தில் இனிப்பு,கார வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு பரிசளிக்கும் வகையில் அலங்கார பரிசு...
கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் தமிழகத்தின் முதல்வராக முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர்...
 வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில்...
சென்னை: தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த அக்.22-ம் தேதி ‘கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக்கட்டுரை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதிலும் கைம்பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்....
சென்னை: பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார். பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழிசை, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவத்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழிசை கூறியதாவது: பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர்களுக்கென்று சில உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கு...
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியது: தமிழகம் முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது. இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர் களை தலைமைக்கு பரிந்துரை செய்யும்....
வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. எனினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இருக்கை,படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், வெகுதூரம் பயணிக்கவேண்டியவர்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில்...
கடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடலூர் வள்ளலார் சர்வதேச மையகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. வடலூரில் உள்ள அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், வடலூர் பெருவெளியில் ரூ.99.90 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக புகார்தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்குள்ள...
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர். தற்போது கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செங்கல்பட்டு பிரிவில் பணி செய்து வருகிறார். இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் தமிழரசி(77), சகோதரிராஜேஸ்வரி(58). தனது சகோதரிராஜேஸ்வரின் மகள் ராஜலட்சுமியை (38)திருமணம் செய்துள்ளார். ராஜலட்சுமி கடந்த 2021-ம்ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் கவுன்சிலர் (திமுக)...