விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம்22-ம் தேதி கட்சியின் கொடி,பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும்கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில்...
முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
admin - 0
உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், அவரது மறைவு முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
மகாராஷ்டிராவின் நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் கஸ்டம்ஸ் அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் போலீஸ் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன்...
பாரதியார் நினைவு நாள் | ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை: பாரதியார் சங்கம் சார்பில் பாரதி சுடர் விருது
admin - 0
பாரதியார் நினைவு நாள் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள பாரதியார்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி...
வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்துள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப் பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரிக்கிறது. இத்தகைய...
மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் இணைய விளையாட்டுகள்; கண்காணிப்பது அவசியம்: தலைமை செயலர் அறிவுறுத்தல்
admin - 0
உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. அவர்களை பெற்றோர்,ஆசிரியர்கள் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றுதலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. முகாமைதலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின்...
இந்தியாவில் பல மாநிலங்களில் காசநோய் பாதிப்பு சவாலாக உள்ள நிலையில், தமிழகத்தில் காசநோய் பாதிப்பில் இருந்து 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும்...
தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அறியாமை காரணமாக சரிவிகித உணவை குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இல்லை. இதனால் ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், போதிய வளர்ச்சி இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 விதிகளின்படி, 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும்பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துணவு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ்,...
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது: மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கருத்து
admin - 0
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது என்று மனநல மருத்து வரும் சினேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் கூறினார்.
உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்.10-ம் தேதி (நேற்று) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சினேகா அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் தற்கொலைத் தடுப்புக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தற்கொலை...
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள்...










