Google search engine
பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வேயில் தினசரி 13,000-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், விரைவு ரயில்களின்பொதுபெட்டிகளில் இடம் இல்லாதவர்கள், முன்பதிவு பெட்டிகளில் நின்றுசெல்லும் நிலை ஏற்பட்டது. இதனால்,முன்பதிவு டிக்கெட்...
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும்...
மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள்...
 “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்...
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 97வயது சுதந்திர போராட்ட வீரருக்குஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021-ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987-ம் ஆண்டு முதல்...
தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் ஜூலை 11 மற்றும் 15-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து, அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர்ஸ்டாலின், அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும்,...
நீட் தேர்வு குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தமிழக அரசு தயங்குவது ஏன்என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறலையும் மீறி பாமக வெற்றிபெறும். இந்த தேர்தலில் 3 அல்லது 4-வது இடத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான், அதிமுக போட்டியிடவில்லை. திமுக என்ற ‘ஏ’ டீம் வெற்றிபெற, அதிமுக என்ற ‘பி’ டீம் போட்டியிடவில்லை. நீட்...
மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து போராடிவரும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர். இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்‌ஷா மற்றும்பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கங்கள்...
“சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்! வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள்...
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை விதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த 110-வது விதியின்கீழ், பொது முக்கியத்துவம் வாய்ந்தபொருள் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பின்கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது. அந்த வகையில், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை...