Google search engine
ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு அரசு தடை செய்தது. இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5...
கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும்...
நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் நாள்தோறும் 2 கோடி பேரும், ஓராண்டில் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டுரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த...
வாராணசியில் வியாஸ் மண்டபத்தில் நடைபெறும் பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கியான்வாபி மசூதி நிர்வாகத்தின் மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு இம்மசூதி முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை ஆய்வுநடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் மசூதியின் ஓசுகானா...
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் என்பவர் போராடி வருகிறார். இவர் ஜால்னா மாவட்டம் அந்தர்வலி சாரதி கிராமத்தில் கடந்த 10-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்நிலையில், மராத்தா சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் நிறைவேறியது. எனினும், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தனது போராட்டத்தை தொடர்ந்தார்...
தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கடந்த 7 முறை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 8-வது முறையாகவும் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆதலால், தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, குப்பத்தில் தனது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென ஆர்வமாக உள்ளார். அதற்காக குப்பம் தொகுதியில் உள்ள ராமகுப்பம் மண்டலம்,...
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் திருமலையில் நேற்று நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 9 ஆயிரம் பேருக்கு ஊதியஉயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் - வன விலங்குகள் மோதலை குறைக்க நடைபாதையில் 7-வது மைல் பகுதியில் ‘நித்ய சங்கீர்த்தனார்ச்சனை’...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்க பேரணியில் கலந்து கொண்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பேசியதாவது:நாட்டில் பெரும்பான்மையான அதாவது 65 சதவீத மக்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். எனவே, வரும் நாட்களில் நாம் அதற்காக உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் 400 இடங்களை பெறுவதை உறுதி...
டெல்லியில் 11.7 லட்சம் பேர் குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.5,737 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தாதவர்களுக்கு ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டம் டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்தக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்களிடம் முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த பாஜகவினர் முயற்சி...
காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி ரயிலை நிறுத்தினர். கடந்த 2010-ம் ஆண்டில் ஹாலிவுட்டில் 'அன்ஸ்டாப்பபிள்' என்ற திரைப்படம் வெளியானது. 39 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமல் சீறிப் பாயும். அந்த சரக்கு ரயிலை நிறுத்த நடக்கும் அதிதீவிர போராட்டங்கள் திரைப்படத்தில் விவரிக்கப்பட்டு இருக்கும். இதுபோன்ற சம்பவம் காஷ்மீரில்...