மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்க பேரணியில் கலந்து கொண்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பேசியதாவது:
நாட்டில் பெரும்பான்மையான அதாவது 65 சதவீத மக்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். எனவே, வரும் நாட்களில் நாம் அதற்காக உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் 400 இடங்களை பெறுவதை உறுதி செய்ய ஆளும் கூட்டணியுடன் இணைந்து செயல்படவேண்டும். இவ்வாறு அஜீத் பவார் கூறினார்.