தடையை மீறி செல்லும் கனரக வாகனங்களை காங்கிரசார் சிறை பிடிப்பார்கள்- விஜய் வசந்த் எம்.பி எச்சரிக்கை

0
280

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள். “பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பெயரில் மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது. காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் பாயும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here