பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த பெண் காவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக...
‘‘என்னால் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது. குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடாது’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லிக்கு செல்லும் முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
என்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது. நான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை...
மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது.
இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு...
பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை பாஜக கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடன் தற்போது என்டிஏ.வின் பலம் 292 ஆக உள்ளது. இதில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை கேரளாவின் மலப்புரம் தொகுதியில் மட்டும்பாஜக களமிறக்கியது. பாஜகசார்பாக மலப்புரத்தில் போட்டியிட்ட அப்துல்...
மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 எம்பிக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களாக கருதப்பட்டது.
தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்பி பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்பி ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி...
மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்...
ஆந்திரா, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவாரா? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
admin - 0
ஆந்திரா, பிஹாருக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில்காங்கிரஸ் பொதுச் செயலாளர்ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மோடியின் மூன்றாவது அரசு மத்தியில் அமைய உள்ளது. ஆனால் இது இம்முறை மோடியின் மூன்றில் ஒரு பங்கு அரசாகத்தான் இருக்கும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று கடந்த 2014 ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதியில் பிரதமர்...
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. அதன் தோழமை கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வென்றது.
ஆளும் கட்சியாக இருந்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில்...
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த இடங்களை ஆளுநர் பார்வையிட வேண்டும்: சுவேந்து அதிகாரி கோரிக்கை
admin - 0
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் பாஜக தொண்டர்களை ஆளும் திரிணமூல் கட்சியின் குண்டர்கள் தாக்குவது வழக்கமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுஇதுவரை 20 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சுமார்10 ஆயிரம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பாஜக சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மத்திய...
தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தும் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா நேற்று நடைபெற்ற நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதார்.
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது ’ஆக்சிஸ் மை இந்தியா’.
350-400 தொகுதிகள்: இந்நிறுவனம் மட்டுமின்றி இந்ததேர்தல் குறித்து ’இந்தியா டுடே’, ‘ரிபப்ளிக் டிவி’ உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட...










