மக்களுக்கு போக்குவரத்தில் இடையூறு இருக்க கூடாது: சந்திரபாபு நாயுடு உத்தரவு

0
43

‘‘என்னால் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது. குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடாது’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லிக்கு செல்லும் முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது. நான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை நிற்கவைத்து விடுவது, கடைகளை மூட சொல்வது போன்ற எந்த ஒரு இடையூறும் இருக்க கூடாது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

இத்தகவல் உடனடியாக விஜயவாடா காவல் ஆணையர்மற்றும் எஸ்பிக்கு தெரிவிக்கப்பட்டது.