தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது சடலம்நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள் ளது. இவர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.இதேபோன்று மற்றொருவர், ஸ்கூட்டரில் சென்று கொண்டி...
இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
காதி துணியினால் செய்யப்பட்ட தேசியக் கொடி தேசிய பெருமையின் உருவகமாக உள்ளது. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பிரதமர் மோடி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருளுடன் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட...
மும்பையில் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் வன்கொடுமை: மக்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப்...
வயநாடு நிலச்சரிவு, கனமழையால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய தேக்கடி: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் வேதனை
admin - 0
வயநாடு நிலச்சரிவு, தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப் படுகின்றன.
தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் வனச்சரணாலய பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இதனால் உள்...
ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.
மூன்றாவது முறையாக பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்த பின்னர் பிரதமர் மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அந்தப் பயணம் சர்வதேச...
குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
admin - 0
குரங்கு அம்மை பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஐ.நா. அறிவித்துள்ளதையடுத்து வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் (விஆர்டிஎல்) தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட்14-ல் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும்...
சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினம் நாடெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு நேற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவரது கையில் ராக்கிக் கயிறு கட்டினர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.முன்னதாக பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்...
பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது...
பெங்களூருவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்: மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டர்களை கீழே தூக்கிப்போட்டு நொறுக்கிய பொதுமக்கள்
admin - 0
பெங்களூருவின் நெலமங்களாவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து ஸ்கூட்டர்களை பிடுங்கிய பொதுமக்கள் அவற்றை மேம்பாலத்தில் இருந்து வீசி சுக்கு நூறாக நொறுக்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பெங்களூரு அருகே நெலமங்களா நகரில் உள்ள மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்டனர். இது, மற்ற பயணிகளிடையே அதிருப்தியையும், பயத்தையும் ஏற்படுத்தியது.அந்த இளைஞர்களின் செயலால் ஆத்திரமடைந்த பிற வாகன...
முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல,...










