மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த இடங்களை ஆளுநர் பார்வையிட வேண்டும்: சுவேந்து அதிகாரி கோரிக்கை

0
65

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் பாஜக தொண்டர்களை ஆளும் திரிணமூல் கட்சியின் குண்டர்கள் தாக்குவது வழக்கமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுஇதுவரை 20 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சுமார்10 ஆயிரம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பாஜக சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மத்திய ஆயுதப் படைகள் இருக்கும்போதிலும், வன்முறையை கட்டுப்படுத்தஇப்படைகள் பயன்படுத்தப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஆளுநர் சென்று பார்வையிட்டு, அப்பாவிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் கூறும்போது, “பாஜக முதலில் மேற்கு வங்க மக்களின் தீர்ப்பைஏற்க வேண்டும். சந்தேஷ்காலியில் பாஜகவினரின் சதி அம்பலமாகிவிட்ட நிலையில் இதுபோன்ற நாடகத்தை அவர்கள் நிறுத்த வேண்டும்” என்றார்.