கொல்கத்தாவில் உள்ள எல்ஜேடி சட்டக் கல்லூரியில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்த சஞ்சிதா காதர் என்ற ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எல்ஜேடி சட்டக் கல்லூரி தனியார் கல்லூரியாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றி வந்த சஞ்சிதா காதரிடம் மே 31-ம் தேதிக்கு...
சீன, பாக்., சவால்கள் என்ன? – மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் விளக்கம்
admin - 0
வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முந்தைய ஆட்சியில் தாங்கள் வகித்த அதே இலாகாவை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஜெய்சங்கர், “மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பு...
99 காங்கிரஸ் எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: குடியரசு தலைவருக்கு டெல்லி வழக்கறிஞர் கடிதம்
admin - 0
சட்டத்தை மீறி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவோம் என காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டை வழங்கியதால், அக்கட்சியின் 99 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி வழக்கறிஞர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு...
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா,...
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க 50 மூன்றாம் பாலினத்தவர் வந்தனர்.
இதுகுறித்து பாஜக தலைவரும் முன்னாள் சமூக நீதித் துறை அமைச்சருமான வீரேந்திர குமார் கூறுகையில், “பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக 50 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு...
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றிபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டேகட்சி மத்திய அமைச்சரவையில்இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேஷ் மாஸ்கே நேற்று முன்தினம் கூறும்போது, “உத்தவ் அணியைச் சேர்ந்த2 எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருதியதாகவும் அது...
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு நேற்றைய (ஜூன் 9) தினம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அதிஷி. அதில் யமுனை ஆற்றில் இருந்து முனாக் கால்வாய் வழியாக 1,050 கனஅடி நீரை திறந்து...
மோடி 3.0 அமைச்சரவையின் முதல் கேபினெட் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) மாலை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதி...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 12 ரன்களில் வென்றது கனடா. இது ஐசிசி டி20 உலகக் கோப்பை அரங்கில் கனடாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கனடா அணி,...
மத்தியில் அடுத்த அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ள போதிலும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் என்டிஏ நாடாளுமன்ற கட்சி தலைவராக பிரதமர் மோடி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சி...










