மோடி 3.0 | பதவி ஏற்பு விழாவில் ஆசி வழங்க வந்த மூன்றாம் பாலினத்தவர்

0
182

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க 50 மூன்றாம் பாலினத்தவர் வந்தனர்.

இதுகுறித்து பாஜக தலைவரும் முன்னாள் சமூக நீதித் துறை அமைச்சருமான வீரேந்திர குமார் கூறுகையில், “பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக 50 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு வழங்கினோம். பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு விடுப்பது இதுவே முதன்முறை” என்றார்.