ஆட்சி அமைக்க உரிமை கோரும் முன் அத்வானியிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

0
133

மத்தியில் அடுத்த அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ள போதிலும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் என்டிஏ நாடாளுமன்ற கட்சி தலைவராக பிரதமர் மோடி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன் பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு எல்.கே.அத்வானியை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here